சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ‘so baby’ பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகிறது. நடிகை பிரியங்கா அருள் மோகன் இதில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பாளராக கலை அரசு படத்தை தயாரித்துள்ளார்.

 image

அண்மையில் டாக்டர் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்ததாக ட்வீட் செய்திருந்தார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே, இப்படத்தின் ‘செல்லம்மா செல்லமா’ பாடல் இளைஞர்களின் செல்ல ரிங் டோனாகவும் காலர் டியூனாகவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இதன் இரண்டாம் பாடலான ‘so baby’ பாடலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக சிவகார்த்திகேயேன நேற்று அறிவித்தார். ஆனால், ரசிகர்களை காக்க வைத்து 7 மணிக்கு வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே 20 ஆயிரம் லைக்ஸ்களைக் குவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்