தாய் தந்தைக்கு கிரீடம் சூடி மகிழ்ந்த மிஸ் இந்தியா ரன்னர் மான்யா சிங் - வைரல் வீடியோ!

சிறுவயதிலிருந்தே வறுமையில் வளர்ந்த மான்யா சிங் தற்போது மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் தனது தாய் தந்தைக்கு கிரீடம் சூடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா ஓம்பிரகாஷ் சிங், வறுமை காரணமாக பகல் நேரங்களில் பள்ளி சென்று படித்தும், மாலை நேரங்களில் பாத்திரம் தேய்த்தும், இரவு நேரங்களில் கால் சென்டரில் வேலை பார்த்தும் பணம் சம்பாதித்துள்ளார். ஒரு காலத்தில் இரவு சாப்பிடாமல் கூட தூங்கியுள்ளார்.

'பாத்திரம் தேய்க்கும் வேலை.. கால்சென்டர் வேலை'- வறுமை குறித்து பேசிய மிஸ் இந்தியா ரன்னர் 

தனது குழந்தை பருவத்தில் ஏராளமான கஷ்டங்களை கடந்து வந்த மான்யா, மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்றபிறகு தனது கல்லூரியில் நடைபெற்ற வெற்றிவிழாவிற்கு குடும்பத்தினருடன் ஆட்டோவில் வந்து இறங்கியதுடன், விழா மேடையில் தனது கிரீடத்தை தனது தாய்க்கும், தந்தைக்கும் மாறி மாறி வைத்த வீடியோ இணையத்தில் பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்