புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

image

இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்